உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஓதியூர் ஏரியில் பறவைகள் கணக்கெடுப்பு வனத்துறை நடவடிக்கை

ஓதியூர் ஏரியில் பறவைகள் கணக்கெடுப்பு வனத்துறை நடவடிக்கை

செய்யூர், : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்த பின், ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடத்துவது வழக்கம்.இதையொட்டி, 2023 -- 24ம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு, இரு கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.முதற்கட்டமாக, நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு, நேற்று முன்தினம் மற்றும் நேற்று மேற்கொள்ளப்பட்டது. நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு, மார்ச் 2 மற்றும் 3ம் தேதிகளில் நடக்க உள்ளது.தொடர் கண்காணிப்பு அடிப்படையில், மாவட்டந்தோறும் நீர்ப்பறவை கணக்கெடுப்பு 20 இடங்களிலும், நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு, 20 இடங்களிலும் நடக்கிறது.தமிழகம் முழுதும் நடக்கும் இந்த கணக்கெடுப்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறை பணியாளர்கள் பங்கேற்கின்றனர்.இதையொட்டி, கடந்த வாரம் பறவைகளை எப்படி கணக்கெடுப்பது, எந்தெந்த பறவை இனங்கள் உள்ளன என்பதை கண்டறிவதற்கான முன்னோட்ட பயிற்சி, வனத்துறை மூலம் வழங்கப்பட்டது.இந்நிலையில், மதுராந்தகம் வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தலைமையில், செய்யூர் அருகே ஓதியூரில் உள்ள 275 ஏக்கர் பரப்பளவு கொண்ட உப்பு நீர் ஏரியில், நீர் பறவைகளை தொலைநோக்கி, கேமரா மூலமாக கண்டறிந்து, கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.செங்கால் நாரை, ஊசிவால் வாத்து, பூ நாரை, நெடுங்கால் உள்ளான், பெரிய கோட்டான் உள்ளிட்ட, 70 வகையான 15,000 பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன.அதிகபட்சமாக, 6,000 ஊசிவால் வாத்துகள், 500 செங்கால் நாரைகள், 350 பூ நாரைகள், 280 நெடுங்கால் உள்ளான், 250 சின்ன கோட்டான், 200 பெரிய கோட்டான் மற்றும் பிற பறவைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை