உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தென்மேல்பாக்கத்தில் கஞ்சா தீயிட்டு அழிப்பு

தென்மேல்பாக்கத்தில் கஞ்சா தீயிட்டு அழிப்பு

மறைமலை நகர்:தமிழக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால், தமிழகம் முழுதும் பல்வேறு மாவட்டங்களில், கடந்த மூன்று ஆண்டுகளில், 102 வழக்குகளில், 3,510 கிலோ கஞ்சா பொருட்கள், 800 கிராம் மெத் ஆம் பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, சிங்கபெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவ கழிவுகள் அழிக்கும் நிறுவனத்தில் நேற்று காலை, போதை பொருள் தடுப்பு பிரிவு கூடுதல் இயக்குனர் அமல்ராஜ் தலைமையில், இந்த போதைப் பொருட்கள் தீயிலிட்டு அழிக்கப்பட்டன.இதன் மதிப்பு 4 கோடி ரூபாய் என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஐ.ஜி., செந்தில்குமாரி, கண்காணிப்பாளர் மயில்வாகனன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி