மேலும் செய்திகள்
புதிதாக சமுதாய கூடம் சித்தாமூரில் அமையுமா?
09-Oct-2024
பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த சீக்கனாங்குப்பம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குப்பை கழிவுகள் அதிகம் தேங்கும் இடங்களில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.தொட்டியில் தேங்கும் குப்பையை துாய்மை பணியாளர்கள் அகற்றி, சீக்கனாங்குப்பம்- - கொடூர் சாலையோரத்தில் கொட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தினமும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்லும் சாலையோரத்தில் குப்பை கொட்டுவதால், துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்றி, திடக்கழிவு மேலாண்மை கூடத்தில் குப்பை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
09-Oct-2024