உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் 11ம் தேதி கிராம சபை கூட்டம்

செங்கையில் 11ம் தேதி கிராம சபை கூட்டம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், அனைத்து ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம், வரும் 11ம் தேதி நடக்கிறது. செங்கல்பட்டு கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிதோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், கடந்த 2ம் தேதி, காந்தி ஜெயந்தி தினத்தில், நிர்வாக காரணங்களால் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால், வரும் 11ம் தேதி காலை 11:00 மணியளவில், ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில், கிராம ஊராட்சிகளில் கடந்த ஏப்., 1ம் தேதி முதல் செப்., 30ம் தேதி வரையிலான பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்க வேண்டும். கடந்த ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையை, கிராமசபையில் ஒப்புதல் பெற வேண்டும். ஊரகப் பகுதிகளில், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்கப்பட உள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை