உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஜி.எஸ்.டி., சாலையில் பெரும் பள்ளங்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

ஜி.எஸ்.டி., சாலையில் பெரும் பள்ளங்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

கூடுவாஞ்சேரி:பெருங்களத்துார் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, செங்கல்பட்டு வரை உள்ள ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறங்களிலும், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.அதனால், வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.இது குறித்து, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பெருங்களத்துாரில் இருந்து செங்கல்பட்டு வரை உள்ள ஜி.எஸ்.டி., சாலையின் இரு மார்க்கத்திலும், பெருங்களத்துார், வண்டலுார், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில், அதிக அளவிலான பள்ளங்கள் உள்ளன.இதில், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் சக்கரங்கள் இறங்கி ஏறும் போது, நிலைதடுமாறி விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர்.எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டி, நெடுஞ்சாலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்தும், இதுவரை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.தற்போது வரும் மழைக்காலத்தில், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி, அதில் இருசக்கர வாகனத்தில் வருவோர் நிலைதடுமாறி விழுந்து, உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, சாலையில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை