உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குட்கா பறிமுதல் செய்யப்பட்ட கடைக்கு சீல்

குட்கா பறிமுதல் செய்யப்பட்ட கடைக்கு சீல்

மதுராந்தகம்:தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்ட ஏ.டி.எஸ்.பி., வேல்முருகன் உத்தரவின்படி, மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் அறிவுறுத்தலின்படி, மதுராந்தகம் போலீசார் ஆய்வு செய்தனர்.இதில், நேற்று ஜி.எஸ்.டி., சாலை பகுதியைச் சேர்ந்த கங்காதரன், 64, என்பவரின் பெட்டி கடையில், 10 பாக்கெட் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ