உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சுனாமி நகரில் ரூ.6 கோடியில் மண்டபம்

சுனாமி நகரில் ரூ.6 கோடியில் மண்டபம்

செம்மஞ்சேரி : சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி சுனாமி நகரில், 6764 வீடுகள் உள்ளன.இங்குள்ள, 11,185 சதுர அடி பரப்பு இடத்தில், 2006ம் ஆண்டு, 150 பேர் அமரும் வகையில் ஒரு சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.குறுகிய இடமாகவும், சேதமடைந்தும் இருந்ததால் இதை இடித்து, பெரிய திருமண மண்டபமாக கட்ட, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவு செய்தது.இதற்காக, 6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில், 11,625 சதுர அடி பரப்பில், இரண்டடுக்கு உடைய 350 பேர் அமரும் வசதியுடன் கட்டப்பட உள்ளது. இதற்கான பணி விரைவில் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை