உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஹிந்துக்கள் உரிமை மீட்பு குழு செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம்

ஹிந்துக்கள் உரிமை மீட்பு குழு செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு, வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும், அந்நாட்டு அரசை கண்டித்தும், வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு சார்பில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பா.ஜ., தொண்டர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.சிறப்பு அழைப்பாளராக பா.ஜ., மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி பங்கேற்று, வங்கதேச அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறை அனுமதி பெறாததால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்து, செங்கல்பட்டு வேதாசலம் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து, மாலையில் விடுவித்தனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை