உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பயன்பாடற்ற குடிநீர் தொட்டி விரைந்து சீரமைக்க எதிர்பார்ப்பு

பயன்பாடற்ற குடிநீர் தொட்டி விரைந்து சீரமைக்க எதிர்பார்ப்பு

அச்சிறுபாக்கம்,இரும்புலி ஊராட்சியில், பராமரிப்பின்றி உள்ள குடிநீர் தொட்டியை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர். சித்தாமூர் ஒன்றியம், இரும்புலி ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். செய்யூர் -- வந்தவாசி மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, இரும்புலி ஊராட்சிக்கு வரும் சாலை உள்ளது. இங்கு, இரும்புலி ஊராட்சி பள்ளிக்கூட கட்டடம் அருகே வசிப்போரின் குடிநீர் தேவைக்காக, 5 ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் ஏற்றி வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது, கடந்த சில ஆண்டுகளாக, இந்த குடிநீர் தொட்டி பயன்பாடின்றி, பழுதடைந்து உள்ளது.மக்கள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் குடிநீரின்றி பலரும் சிரமப்படுகின்றனர். எனவே, பயன்பாடற்று உள்ள குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ