மேலும் செய்திகள்
இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு பதிவு
30-Aug-2025
மறைமலை நகர்:காட்டாங்கொளத்துாரில், நீண்ட நேரம் மொபைல்போனில் பேசிய மனைவியின் கழுத்தை, காய்கறி வெட்டும் கத்தியால் கழுத்தை கிழித்த கணவரிடம், போலீசார் விசாரிக்கின்றனர். மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 38; வேன் ஓட்டுநர். இவரது மனைவி சத்யா, 35. நேற்று முன்தினம் இரவு, மணிகண்டன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்துள்ளார். அந்த நேரத்தில் சத்யா, நீண்ட நேரமாக மொபைல்போனில் பேசிஉள்ளார். இதனால் கோபமடைந்த மணிகண்டன், சமையல் அறையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து, மனைவி சத்யா கழுத்தில் கிழித்துள்ளார். சத்யாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறு காயத்துடன், அவர் உயிர் தப்பினார். இது குறித்து மணிகண்டனிடம், மறைமலை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Aug-2025