உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதுப்பாக்கம் சட்ட கல்லுாரியில் சர்வதேச பயிலரங்கம் நிறைவு

புதுப்பாக்கம் சட்ட கல்லுாரியில் சர்வதேச பயிலரங்கம் நிறைவு

திருப்போரூர்;திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கத்திலுள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரியில் நடந்த, மூன்று நாள் சர்வதேச பயிலரங்கம் நிறைவடைந்தது. திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரியில், 'சமகால சட்ட சிக்கல்கள் மற்றும் வளர்ந்து வரும் போக்குகள்' என்ற தலைப்பில், மூன்று நாள் சர்வதேச பயிலரங்கம் நடந்தது. இதில், தமிழ்நாடு முழுதும் உள்ள 15 அரசு சட்டக்கல்லுாரிகளில் இருந்து தலா 20 மாணவர்கள் வீதம், 300 மாணவ - மாணவியர் பங்கேற்றனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்த பயிலரங்கத்தின் நிறைவு விழா, நேற்று முன்தினம் மாலை நடந்தது. தமிழ்நாடு சட்ட கல்வி இயக்குநர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் சட்டக்கல்லுாரி முதல்வர் ஜேம்ஸ் ஜெயபால் முன்னிலை வகித்தார். புதுப்பாக்கம் சட்டக்கல்லுாரி முதல்வர் ஜெயகவுரி வரவேற்றார். தர்மபுரி அரசு சட்டக்கல்லுாரி முதல்வர் உஷா, பயிலரங்கம் குறித்த திட்ட அறிக்கையை வாசித்தார். சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியும், சட்ட பல்கலை ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினருமான பாரதிதாசன் பங்கேற்று, பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். நிறைவில், நாமக்கல் சட்டக்கல்லுாரி முதல்வர் அருண் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை