| ADDED : நவ 19, 2025 04:58 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட, ஜாக்டோ - ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில், கலெக்டர் வளாகத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கும் மேல், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும். கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பை 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து, மீண்டும் 25 சதவீதமாக வழங்க வேண்டும். 2002 - 2010ம் ஆண்டு வரை, தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தினர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கம், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சுதர்சன், மாவட்ட செயலர் குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.