உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வேலை வாய்ப்பு முகாம் 409 பேருக்கு பணி ஆணை

வேலை வாய்ப்பு முகாம் 409 பேருக்கு பணி ஆணை

பல்லாவரம்: பல்லாவரத்தில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 409 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.பல்லாவரம் வேல்ஸ் கல்லுாரியில், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை, நேற்று நடத்தின.இதில், 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள், இரண்டு திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்றன.மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம், மகளிர் திட்டம் மற்றும் முன்னோடி வங்கி சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டன.இம்முகாமில், 2,314 பேர் பங்கேற்றனர். இவர்களில், 409 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பரசன், பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ