உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கீரப்பாக்கம் சாலை சீரமைப்பு பணி

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கீரப்பாக்கம் சாலை சீரமைப்பு பணி

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டூர் முதல் அருங்கால் வரை உள்ள 800 மீட்டர் சாலை, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதி சாலை மேடு, பள்ளமாகவும், குண்டும் குழியுமாகவும் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. தற்போது, அச்சாலையை சீரமைத்து தார்ச் சாலை அமைக்கும் பணி துவங்கியது.இது குறித்து, கீரப்பாக்கம் ஊராட்சி தலைவி செல்வ சுந்தரி கூறியதாவது:கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டூர் முதல் அருங்கால் வரை, சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற முறையில் இருந்தது.சாலையை பராமரிப்பதற்காக, 60 ஆண்டு காலத்திற்கு மேல் போராடி, இப்போது தான் வெற்றி பெற்றுள்ளோம்.இந்த சாலையை சீரமைப்பதற்காக, தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள், சமூக நல அலுவலர்கள் என, அனைவரின் ஒட்டுமொத்த முயற்சி பெரும்பங்கு வகிக்கிறது.எனவே, சாலை பணிகளை விரைவாக முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்