உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஸ்தலசயனர் கோவிலில் கும்பாபிஷேக பந்தக்கால்

ஸ்தலசயனர் கோவிலில் கும்பாபிஷேக பந்தக்கால்

மாமல்லபுரம்:ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், மாமல்லபுரத்தில் ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. வைணவ சமய 108 திவ்வியதேச கோவில்களில் ஒன்று. ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், பூதத்தாழ்வார் உள்ளிடட ஆழ்வார்கள் என, சுவாமியர் வீற்றுள்ளனர்.கடந்த 1998க்கு பின், 25 ஆண்டுகள் கடந்து, மீண்டும் மஹா கும்பாபிஷேகம் நடத்த, அறநிலையத்துறை நிர்வாகம் முடிவெடுத்தது. உபயதாரர் குமார் என்பவர் மூலம், 3.51 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு திருப்பணிகளை மேற்கொண்டது. இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடந்துவரும் நிலையில், வரும் பிப். 1ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, உற்சவ விழா பந்தக்கால், நேற்று காலை 5:45 மணிக்கு, பட்டாச்சாரியார்கள் வேத முழக்கத்துடன் நடப்பட்டது. செயல் அலுவலர் சக்திவேல், உபயதாரர் குமார், பட்டாச்சாரியார்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை