மேலும் செய்திகள்
சக்ர விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
22-Aug-2025
திருப்போரூர்:திருப்போரூர் அருகே, சிறிய காட்டூர் கிராமத்தில், புதியதாக கட்டி முடிக்கப்பட்ட இளங்குமரன் கோவிலில் நுாதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. கடந்த 1ம் தேதி, முதல் கால யாக பூஜை கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜை நடந்தது.தொடர்ந்து, நேற்று, மூன்றாம் கால யாக பூஜை என பல்வேறு பூஜைகளுடன், கும்பாபிஷேக விழா நடந்தது. காலை 9:00 மணியளவில், யாகசாலையில் உள்ள புனித நீர் கலசத்தை சிவாச்சாரியார்கள் கொண்டு சென்று கோவில் விமானத்திற்கும், மூலவர் இளங்குமரனுக்கும் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
22-Aug-2025