உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மறைமலை நகரில் இருவருக்கு குண்டாஸ்

மறைமலை நகரில் இருவருக்கு குண்டாஸ்

மறைமலை நகர்:மறைமலைநகர் அடுத்த காட்டாங்கொளத்தூர் முத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுகுமாரன் மகன் குட்டி என்ற ராகவேந்திரா, 25. பொத்தேரி அண்ணாநகரைச் சேர்ந்தவர் சூர்யா,26.இருவர் மீதும் மறைமலைநகர் மற்றும் புறநகர் காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை, கொலை மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த மாதம் மறைமலைநகர் போலீசார் இருவரையும் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். தற்போது, இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்ய தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார். மறைமலைநகர் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் உத்தரவுக்கான ஆணையை, புழல் சிறையில் உள்ள இருவரிடமும் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ