உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்னல் பாய்ந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு

மின்னல் பாய்ந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு

பவுஞ்சூர்: பவுஞ்சூரில் நேற்று, விவசாய வேலை செய்து கொண்டிருந்த கூலித்தொழிலாளி, மின்னல் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பவுஞ்சூர் அடுத்த பச்சம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன், 35; கூலித்தொழிலாளி. நேற்று வழக்கம் போல, வெளிக்காடு பகுதியில் உள்ள பி.ஜி.ஆர்., தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டு இருந்தார். நேற்று மாலை 3:30 மணியளவில் மழை பெய்த போது, வயல்வெளியில் வேலைசெய்து கொண்டு இருந்த குப்பன் மீது மின்னல் பாய்ந்தது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அணைக்கட்டு போலீசார், குப்பன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து, மேலும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை