| ADDED : ஜன 30, 2024 10:10 PM
செங்கல்பட்டு:திருப்போரூரில், 'உங்களை தேடி; உங்கள் ஊரில்' என்ற புதிய திட்ட முகாம், இன்று நடக்கிறது.இது குறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் என, 'உங்களை தேடி; உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்தை செயலாக்கும் நோக்கில், திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், திருப்போரூர் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த சிறப்பு முகாம், இன்று மாலை 4:30 முதல்- மாலை 6:00 மணி வரை நடக்கிறது.இதில், திருப்போரூர் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலைக்கடைகள், பள்ளிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்தோர் கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.