உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பங்கு சந்தையில் நஷ்டம் வாலிபர் தற்கொலை

பங்கு சந்தையில் நஷ்டம் வாலிபர் தற்கொலை

சென்னை:சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, கார்ப்பரேஷன் காலனி, இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன், 37; ஷேர் மார்க்கெட் தொழில் செய்து வந்தார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், மூன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.இவர் தனியார் நிறுவனத்தில், பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார். இதில், லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, கடன் சுமையால் அவதிப்பட்டுள்ளார். இதனால் மன உளைச்சலடைந்த லட்சுமணன் நேற்று, 'கடன் சுமை தாங்க முடியவில்லை; என்னால் அனைவருக்கும் கஷ்டம்' என கடிதம் எழுதி வைத்துவிட்டு, அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் உடலைக் கைப்பற்றி, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை