மேலும் செய்திகள்
போன் திருடிய ஒடிஷா நபர் கைது
28-May-2025
ஏரியில் அழுகி நிலையில் ஆண் சடலம் மீட்பு
28-May-2025
மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி பாவேந்தர் சாலையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சூதாட்டம் நடைபெறுவதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, பாவேந்தர் சாலைக்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு ஒரு நம்பர் லாட்டரி சூதாட்டம் நடத்தி வந்த நபரை, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர், பேரமனுார் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 50, என்பதும், மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.கார்த்திக் மீது வழக்கு பதிந்த போலீசார், விசாரணைக்குப் பின் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
28-May-2025
28-May-2025