உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டிராலி சூட்கேஸ், பெரிய பைகளுக்கு இனி லக்கேஜ் கட்டணம்: எம்.டி.சி.,

டிராலி சூட்கேஸ், பெரிய பைகளுக்கு இனி லக்கேஜ் கட்டணம்: எம்.டி.சி.,

சென்னை: 'மாநகர பேருந்தில், பயணியர் எடுத்து வரும் 65 செ.மீ., மேல் உள்ள டிராலி வகை சூட்கேஸ்கள், பெரிய பைகள், 20 கிலோவுக்கு மேல் எடையுள்ள 'லக்கேஜ்'களுக்கு, ஒரு பயணியருக்கான பயண கட்டணம் வசூலிக்கப்படும்' என, மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.இது குறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில், பயணியர் கொண்டு செல்லும் பொருட்களுக்கான 'லக்கேஜ்' கட்டணம் குறித்து நடத்துனர் மற்றும் பயணியரிடையே சுமுகமான உறவை உறுதி செய்யும் வகையில், பயணியரிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள், புகார்களின் அடிப்படையில் மாநகர சாதாரண, விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளில் கொண்டு வரும் லக்கேஜ்களுக்கு கட்டணம் வசூலிக்கும் போது, கீழ்கண்ட விதிமுறைகளை நடத்துனர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறதுl பேருந்துகளில் பயணியர் சொந்த உபயோகத்திற்காக தோள்களில் மாட்டிச் செல்லக் கூடிய பைகள், துணிகள் அடங்கிய கைப்பெட்டிகள், பைகள், கேமரா போன்ற கையடக்கமான சாதனங்கள், மடிக்கணினி, சிறிய அளவிலான கையில் எடுத்துச் செல்லத்தக்க மின் சாதன பொருட்கள் போன்றவை மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள் கலை நிகழ்ச்சிக்கு செல்லும் நாட்டுப்புற கலைஞர்கள் கொண்டு செல்லும் வாத்திய கருவிகள் ஆகியவற்றை இலவசமாக ஏற்றிச் செல்லலாம் l உடைமைகளை எடுத்துச்செல்லும்,'டிராலி' வகையான சூட்கேஸ்கள் அதிகபட்சமாக 65 சென்டி மீட்டர் அளவுள்ள சூட்கேஸ்கள் மற்றும் பைகள் ஆகியவற்றை கட்டணமின்றி பயணியர் எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம்l பேருந்தில் சொந்த உபயோகத்திற்கான 20 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம்l பயணியர் எடுத்து வரும் 65 செ.மீ.,க்கு மேல் உள்ள டிராலி வகையான சூட்கேஸ்கள், பெரிய பைகள், 20 கிலோவுக்கு மேல் எடையுள்ள லக்கேஜ்களுக்கு ஒரு பயணியருக்கான பயண கட்டணம் வசூலிக்க வேணடும்l 20 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள வணிக நோக்கத்திற்காக எடுத்துச் செல்லும் லக்கேஜ்களுக்கு, ஒரு பயணியருக்கான பயண கட்டணம் வசூலிக்க வேண்டும்l அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள், கடத்தல் பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாதுl பேருந்தில் அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணியருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைகளை அனுமதிக்கக் கூடாதுசக பயணியரை பாதிக்கும் ஈரமான சுமைகளை அனுமதிக்கக் கூடாது பயணியர் இல்லாத சுமைகள் தனியாக பேருந்தில் அனுமதிக்கக் கூடாது செய்தித்தாள்கள் மற்றும் தபால்களை கொண்டு செல்ல, முன் அனுமதி பெற வேண்டும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ