மேலும் செய்திகள்
அடையாள அட்டை எண் பெற விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுரை
18 hour(s) ago
மதுராந்தகம்: மதுராந்தகம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் தனி அடையாள எண் பதிவு செய்ய, விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது. மதுராந்தகம் தாலுகாவில் விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்குவதற்காக தகவல் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. ஆதார் எண் போல் விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மதுராந்தகம் வேளாண் உதவி இயக்குநர் நெடுஞ்செழியன் கூறியதாவது: அனைத்து ஊராட்சி அலுவலக இ-- - சேவை மையங்களில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணி வேளாண்மை துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது ஆதார் எண், அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் எண், சுய விபரங்கள், பட்டா, சிட்டா, ரேஷன் கார்டு போன்ற தகவல்களை நேரில் சென்று தெரிவிக்கலாம். அந்தந்த கிராம பகுதிகளில் வேளாண்துறை அதிகாரிகள், தோட்டக்கலை பணியாளர்கள் பதிவு செய்து வருகின்றனர். இதுவரை தனி அடையாளம் எண் பதிவு செய்யாத விவசாயிகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் விவசாயம் சார்ந்த நல திட்டங்களை பெறுவதற்காக, தனி அடையாள எண் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
18 hour(s) ago