மேலும் செய்திகள்
சாலையில் மரண பள்ளங்கள் அனுமந்தபுரத்தில் அச்சம்
04-Feb-2025
சித்தாமூர்சித்தாமூர் பகுதியில் மதுராந்தகம்-வெண்ணாங்குப்பட்டு இடையே செல்லும் 37 கி.மீ., மாநில நெடுஞ்சாலை உள்ளது.சூணாம்பேடு, நுகும்பல், சித்தாமூர், முதுகரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுராந்தகம், செங்கல்பட்டு, புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்துகின்றனர்.தினசரி சாலையில் இருசக்கர வாகனம், கார், தனியார் மற்றும் அரசு பேருந்து என ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. சாலை நடுவே பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.இந்நிலையில் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் பழுதடைந்த சாலையை சீரமைக்க முடிவு செய்து, தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டது.பொலம்பாக்கம், நுகும்பல், புத்திரன்கோட்டை, இல்லீடு பகுதியில் தலா 1 கி.மீ., மற்றும் வெண்ணாங்குப்பட்டு பகுதியில் 800 மீட்டர் என 4.8 கி.மீ நீளத்திற்கு பள்ளங்கள் ஏற்பட்டு பழுதடைந்து உள்ள சாலைகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
04-Feb-2025