உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மல்லை தமிழ் சங்கம் விருதுகள் வழங்கல்

மல்லை தமிழ் சங்கம் விருதுகள் வழங்கல்

மாமல்லபுரம்:ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யாவை தலைவராகவும், சிற்பக்கலைஞர் பாஸ்கரனை செயலராகவும் மற்றும் நிர்வாகிகளுடனும், மாமல்லபுரத்தில் மல்லை தமிழ்ச் சங்கம் செயல்படுகிறது. இச்சங்கம், ஆண்டுதோறும், கலை, இலக்கியம் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் சான்றோர்களுக்கு, விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது. நடப்பு 2025ம் ஆண்டின் விருதுகள் வழங்கும் விழா, நடந்தது.தமிழீழ தேசிய கவிஞர் காசி ஆனந்தனுக்கு பெருந்தமிழன் விருது, தமிழிசை பாடகர் திருச்சி லோ.மகாராஜனுக்கு பெருந்தச்சன் விருது வழங்கப்பட்டது. மேலும் மல்லை சத்யா எழுதியுள்ள தென்னாப்பிரிக்காவில் திருவள்ளுவர், வியட்நாம் புரட்சி, தமிழர்களின் அறச்சீற்றம், மணிமகுடமா, முள்கிரீடமா, கடல் மல்லையிலிருந்து கடாரம் வரையிலான மலேசிய நினைவலைகள், வாகை சூடுவோம் உள்ளிட்ட நுால்கள் வெளியிடப்பட்டன. உலக தமிழ்ச் சங்க தலைவர் வி.ஜி.பி., சந்தோசம், சென்னை, உயர்நீதிமன்ற லோக் அதாலத் நீதிபதி வள்ளிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை