உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போலீசார் பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்தவர் கைது

போலீசார் பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்தவர் கைது

செங்கல்பட்டு:சென்னை, மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா என்பவரது மகள் அபிநயா. இவருக்கு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஆலந்துார் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. கடந்த அக்., மாதம் 25ம் தேதி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்ற போது ஏற்பட்ட சண்டை தொடர்பாக, இரு தரப்பினர் மீதும் செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.இதுகுறித்து பிரேமாவின் சகோதரர் முரளி,51, என்பவர், தன் குடும்ப நண்பர் சிவக்குமார் என்பவரிடம் கூறியுள்ளார்.சிவக்குமார், அவரது நண்பரான தாம்பரத்தைச் சேர்ந்த இளஞ்செழியன்,42, என்பவருக்கு, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் சில போலீஸ் அதிகாரிகளை தெரியும் என்றும், அவர்களுக்கு தர வேண்டுமெனவும் கூறி, பல்வேறு தவணைகளில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து, 1.50 லட்சம் ரூபாய் வரை பெற்று உள்ளார்.இந்த வழக்கு தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லாததால் சந்தேகமடைந்த முரளி, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் விசாரித்ததில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.இதுகுறித்து, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளஞ்செழியனை நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ