மேலும் செய்திகள்
வங்கி வாடிக்கையாளர்களுக்கு டி.எஸ்.பி., 'அட்வைஸ்'
22-Nov-2024
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மயிலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம்குமார், 45. இவர், கடந்த அக்., 2ம் தேதி, கரும்பாக்கம் கிராமத்திலுள்ள ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க சென்றார்.அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் தன் கார்டை கொடுத்து, ரகசிய எண்ணைக் கூறி பணம் எடுக்க உதவி கேட்டுள்ளார்.அந்த நபர் முயற்சி செய்துவிட்டு, பணம் வரவில்லை எனக் கூறி, அவர் மறைத்து வைத்திருந்த மற்றொரு கார்டை ஸ்ரீராம்குமாரிடம் கொடுத்துள்ளார்.அதன் பின் மறுநாள் நெல்லிக்குப்பம், பெருமாட்டுநல்லுார், காயாரம்பேடு ஆகிய பகுதிகளிலுள்ள ஏ.டி.எம்.,களில், அந்த மர்ம நபர் 39,500 ரூபாய் எடுத்துள்ளார்.இதுகுறித்த குறுஞ்செய்தி வந்ததும், தன் கணக்கு உள்ள வங்கி கிளைக்கு சென்று ஸ்ரீராம்குமார் விசாரித்த போது, வேறு கார்டை கொடுத்து ஏமாற்றி, மர்ம நபர் பணம் எடுத்தது தெரிந்தது.இதுகுறித்த புகாரின்படி, திருப்போரூர் போலீசார் விசாரித்ததில், வேலுார் மாவட்டம், கழிஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார்,34, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.இவர் ஏற்கனவே, இதேபோன்ற குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு, கேளம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, செங்கல்பட்டு சிறையில் இருப்பது தெரிந்தது.இதையடுத்து, திருப்போரூர் போலீசார் அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, ஸ்ரீராம்குமாரை ஏமாற்றி பணம் எடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார். போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.
22-Nov-2024