உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சுற்றுலா விடுதி ஊழியர்களுக்கு மருத்துவ முகாம்

சுற்றுலா விடுதி ஊழியர்களுக்கு மருத்துவ முகாம்

மாமல்லபுரம், மாமல்லபுரம் அரசு சுற்றுலா விடுதி ஊழியர்களுக்கு, மருத்துவ முகாம் நேற்று நடந்தது.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கடற்கரை விடுதி, மாமல்லபுரத்தில் இயங்குகிறது. விடுதி, உணவகம், நீச்சல்குளம், தோட்டம் உள்ளிட்டவற்றில், ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். விடுதி நிர்வாகம், அவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்தது.விடுதி வளாகத்தில் நேற்று நடந்த முகாமை, விடுதி மேலாளர் அன்பரசன் துவக்கினார். சென்னை பெரும்பாக்கம், கிளெனீகல்ஸ் மருத்துவமனை குழுவினர், ஊழியர்களின் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, கண், உடல் எடை உள்ளிட்டவை குறித்து பரிசோதித்து, உடல்நல பாதிப்புகள் குறித்து விளக்கினர்.சிகிச்சை பெற வேண்டிய அவசியம் உள்ளவர்களிடம், மருத்துவ காப்பீடு அட்டை வாயிலாக சிகிச்சை பெறவும் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை