உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு கல்லுாரியில் அடிப்படை வசதி அமைச்சர் அன்பரசன் உத்தரவு

அரசு கல்லுாரியில் அடிப்படை வசதி அமைச்சர் அன்பரசன் உத்தரவு

செய்யூர்:செய்யூர் - போளூர் நெடுஞ்சாலை அருகே உள்ள அரசுக்கு சொந்தமான, 7 ஏக்கர் இடத்தில், செய்யூர் அரசு கலைக்கல்லுாரி அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இந்நிலையில், பிளஸ் - 2 முடிவுகள் வெளியாகி, மாணவ - மாணவியர் 'ஆன்லைன்' வாயிலாக அரசு கல்லுாரிகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.செய்யூர் அரசு மற்றும் கலைக் கல்லுாரிக்கு இந்த கல்வி ஆண்டிற்காக, ஆங்கில வழி கற்றலில் மூன்று, தமிழ் வழி கற்றலில் இரண்டு என, மொத்தம் ஐந்து பாடப்பிரிவுகளின் கீழ், 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.கல்லுாரிக்கு தனி கட்டடம் அமைக்கும் வரை, செய்யூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக கல்லுாரியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று காலை 8:30 மணியளவில், கல்லுாரி செயல்பட உள்ள கட்டடத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் ஆய்வு செய்தனர்.பள்ளி வளாகத்தில் சிமென்ட் கல் சாலை அமைக்கவும், கல்லுாரி மாணவர்களுக்கு கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் உத்தரவிட்டார்.இதையடுத்து, நிரந்தரமாக கல்லுாரி கட்டடம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள, செய்யூர் - போளூர் நெடுஞ்சாலை அருகே உள்ள அரசுக்கு சொந்தமான 7 ஏக்கர் இடத்தை ஆய்வு செய்து, அதுகுறித்த விபரங்களை கேட்டறிந்தார்.ஆய்வின் போது, செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபு, மதுராந்தகம் ஆர்.டி.ஓ., ரம்யா, மண்டல கல்லுாரி கல்வி இயக்குநர் மலர், செய்யூர் வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ