மேலும் செய்திகள்
சிறுபான்மையினருக்கு 'டாம்கோ' கடனுதவி
05-Nov-2024
செங்கல்பட்டு:தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் வாயிலாக, தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்வி கடன் ஆகியவை வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் வாயிலாக, செங்கல்பட்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், எட்டு தாலுகா தலைமை இடங்களிலும், சிறப்பு கடன் முகாம், 20ம் தேதி வரை நடக்கிறது.மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர், கடன் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.சென்னை ஒட்டிய பகுதிகளான பல்லாவரத்தில் இன்றும், தாம்பரத்தில் நாளையும், வண்டலுாரில் நாளை மறுநாளும் இம்முகாம் நடக்கிறது.செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் அறிக்கையில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
05-Nov-2024