உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாதிரி வினாத்தாள் விற்பனை

மாதிரி வினாத்தாள் விற்பனை

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளின் பொது தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் விற்பனை மையம் உள்ளது.தமிழ்நாடு பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், மாதிரி வினாத்தாள் மற்றும் தீர்வுப் புத்தகம் அடங்கிய 11 புத்தகங்கள் விற்பனையை, அரசு துவக்கியுள்ளது.தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும், மாதிரி வினாத்தாள் மற்றும் தீர்வுப் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டள்ளன. இதில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 புத்தகங்கள், பிளஸ் 2 மாணவர்களுக்கு 8 புத்தகங்கள் என, 11 புத்தகங்கள் அச்சிடப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.மாதிரி வினாத்தாள் மற்றும் தீர்வுப் புத்தகம் அடங்கிய தொகுப்பு, குறைந்தபட்சம் 70 ரூபாயிலிருந்து 175 ரூபாய் வரையான விலையில் கிடைக்கும் என, முதன்மை கல்வி அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை