| ADDED : ஜன 30, 2024 03:38 AM
கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனுார் ஊராட்சி கண்ணதாசன் நகரில் அதிகமான வீடுகள் உள்ளன. இங்கு, சமீபத்தில் பெய்த மழை நீர் தேங்கியுள்ளது.அதனால், துர்நாற்றம்வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகமாகி, நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:கண்ணதாசன் நகர் பகுதியில் மழைநீர் தேங்கி, குட்டை போல் காட்சி அளிக்கிறது. அதில், கழிவுநீரும் கலப்பதால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லை அதிகரித்து உள்ளது.இது குறித்து, ஆதனுார் ஊராட்சி அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, தேங்கிய மழை நீரை அகற்றி, இப்பகுதியில் கொசு மருந்து தெளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.