உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கேளம்பாக்கம் - கோவளம் சாலையை அகலப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை

கேளம்பாக்கம் - கோவளம் சாலையை அகலப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை

திருப்போரூர்:கேளம்பாக்கம் - கோவளம் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓ.எம்.ஆர்., மற்றும் இ.சி.ஆர்., சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக, கேளம்பாக்கம் - கோவளம் சாலை உள்ளது. அதிக அளவிலான வாகனங்கள், இச்சாலையில் பயணிக்கின்றன. குறிப்பாக, சுற்றுலா பயணியர் அதிகம் பயன்படுத்தும் சாலையாக உள்ளது. இச்சாலையின் குறுக்கே, படூர்- - தையூர் ஆறுவழிச் சாலையும் செல்கிறது. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த கேளம்பாக்கம் - கோவளம் சாலை குறுகியதாக உள்ளதால், வாகனங்கள் எதிரெதிரே கடந்து செல்லும் போது, விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. இச்சாலையில் உள்ள அபாய வளைவுகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டதால், முதற்கட்டமாக சாலை வளைவுகளில் மட்டும் தற்காலிகமாக, மையத் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. எனவே, விபத்து ஏற்படாமல் தடுக்க, நிரந்தர தீர்வாக கேளம்பாக்கம் - கோவளம் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை