உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கடமலைப்புத்துாரில் சேதமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

 கடமலைப்புத்துாரில் சேதமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

அச்சிறுபாக்கம்: கடமலைப்புத்துாரில் சாலை சேதமடைந்து, ஏற்பட்டுள்ள பள்ளங்களில் கற்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அச்சிறுபாக்கம் அருகே, சென்னை --- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், கடமலைப்புத்துார் ஊராட்சி அமைந்து உள்ளது. இந்த, தேசிய நெடுஞ்சாலை யில் இருந்து, புறவழிச்சாலையில் பிரிந்து ஒரத்தி வழியாக வந்தவாசி, காஞ்சிபுரம் செல்லும் நெடுஞ்சாலை உள்ள து. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சாலை கடுமையாக சேதமடைந்து, பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. தற்போது, அந்த பள்ளங்களில் மண் கொட்டி சமன்படுத்தாமல், கற்களை கொட்டி வைத்து உள்ளனர். இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலையை பயன்படுத்துவோர், மிகுந்த அச்சத்துடன் க டந்து செல்கின்றனர். எனவே, பள்ளங்களில் உள்ள கற்களை அப்புறப்படுத்தி விட்டு, தார் கலவை கொட்டி சமன் செய்ய, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்