உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்யூர் பஜார் வீதியை விரிவாக்கம் செய்ய வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

செய்யூர் பஜார் வீதியை விரிவாக்கம் செய்ய வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

செய்யூர், செய்யூர் பஜார் வீதி குறுகலாக உள்ளதால் விரிவாக்கம் செய்ய, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். செய்யூர் ஊராட்சியில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட பஜார் பகுதியில் தேவராஜபுரம் வழியாக தண்ணீர்பந்தல் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள், இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். தற்போது அமைக்கப்பட்டுள்ள தார் சாலை, 10 அடி அகலம் மட்டுமே உள்ளதால், கார், வேன், பேருந்து,லாரி ஆகியவை சென்றுவர கடினமாக உள்ளது. பஜார் வீதியில் ஏராளமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளன. கடை வீதிக்கு வரும் மக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை, சாலையில் தாறுமாறாக நிறுத்துவதாலும்,காலை மற்றும் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். துறை சார்ந்த அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து, சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை