உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பார்க்கிங் ஏரியாவாக மாறிய பேரூராட்சி அலுவலக வளாகம்

பார்க்கிங் ஏரியாவாக மாறிய பேரூராட்சி அலுவலக வளாகம்

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், கங்கைகொண்டான் மண்டபம் சந்திப்பு பகுதியில், பேரூராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. அலுவலக வளாகத்தில், கட்டடத்தை தவிர்த்து, முன்புறம் குறுகிய இடமே உள்ளது. இந்த இடத்தை கடந்தே, அலுவலகத்திற்குள் நுழைய இயலும். அலுவலகத்திற்கு கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றில் வருவோர், அவற்றை வெளியில் நிறுத்தாமல், அலுவலக வராண்டாவிலும், குறுகியமுன்புறத்திலும் நிறுத்துகின்றனர்.ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலுவலகம் உள்ளே செல்ல வழியின்றி, சிரமப்பட்டு வருகின்றனர். அங்கிருந்து நீண்டநேரம் வாகனத்தை எடுக்காமல், இடையூறாக உள்ளது. எனவே, வாகனங்கள் நிறுத்துவதை பேரூராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை