உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டாக்டரை மிரட்டி ரூ.30,000 பறித்து தப்பிய மர்ம நபர்கள்

டாக்டரை மிரட்டி ரூ.30,000 பறித்து தப்பிய மர்ம நபர்கள்

குரோம்பேட்டை, குரோம்பேட்டையைச் சேர்ந்த 30 வயது டாக்டர் ஒருவர், ஆப்' வழியாக ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டதோடு, அவர்கள் வாயிலாக போதை பொருட்களை பெற்று, பயன்படுத்தியதாகவும் தெரிகிறது.இந்நிலையில், டிச., 6ல்,டாக்டரிடம் 'சாட்' செய்த நபர், நேரில் சந்திக்க வேண்டுமெனக்கூறி, டிச., 8ல், டாக்டரின் வீட்டிற்கு வந்துள்ளார். பின், அவரை தன் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, அதே பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார்.அங்கு, தன் நண்பரை வரவைத்து, இருவரும் சேர்ந்து டாக்டரை மிரட்டியுள்ளனர். 'நாங்கள் போதை தடுப்பு சிறப்பு காவலர்கள். நீங்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதோடு, அதை விற்பனை செய்யும் தகவல் கிடைத்துள்ளது. உங்கள் நண்பர்கள் போல் நடித்து, முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளோம்.'எங்களுடன் சாட் செய்த போது, நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களையும் அனுப்பி உள்ளீர்கள். அதை ஆதாரமாக வைத்து, உங்களை கைது செய்யப் போகிறோம். ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் விட்டுவிடுகிறோம்' என்றும் மிரட்டியுள்ளனர்.பதறிப்போன டாக்டர், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை கூறியுள்ளார். இதையடுத்து, ஜி - பே வாயிலாக, 30,000 ரூபாயை பறித்த மர்ம நபர்கள், மீத பணத்தை அடுத்த வாரம் தரவேண்டும் என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.பயந்துபோன டாக்டர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை