உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நந்திவரம்- - கூடுவாஞ்சேரியில் கவுன்சிலர்கள் சிறப்பு கூட்டம்

நந்திவரம்- - கூடுவாஞ்சேரியில் கவுன்சிலர்கள் சிறப்பு கூட்டம்

கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி தலைவர் கார்த்திக் தலைமையில், கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், நகராட்சி கமிஷனர் தாமோதரன், துணைத் தலைவர் லோகநாதன், பொறியாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ், மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், புயல் மழையால் மக்கள் பாதிக்கப்படாத வகையில், தேவையான அடிப்படை வசதிகள் செய்து உதவிய நகராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு, நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், மழையால் பாதிக்கப்பட்ட மஹாலட்சுமி நகர், உதயசூரியன் நகர், அமுதம் காலனி, மீனாட்சி நகர், சீனிவாசபுரம், அருள் நகர், ஜெகதீஷ் நகர் ஆகிய பகுதிகளில் சேதமான சாலைகளை சீரமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை