உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செம்மஞ்சேரியில் தேசிய கூடைப்பந்து போட்டி

செம்மஞ்சேரியில் தேசிய கூடைப்பந்து போட்டி

சென்னை, தமிழக பள்ளிக் கல்வித்துறை மற்றும் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் இணைந்து, 68வது தேசிய அளவில் மாணவியருக்கான கூடைப்பந்து போட்டிகள் இன்று துவங்குகிறது. போட்டிகள், செம்மஞ்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரியில், 19ம் தேதி வரை நடக்கிறது.இதில், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், மாணவியருக்கு மட்டும் போட்டி நடக்கிறது. போட்டியில், தமிழகம் உட்பட நாடு முழுதும் இருந்து, 33 மாநில அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள், 'லீக்' மற்றம் 'நாக் - அவுட்' முறையில் நடக்கிறது. இன்று காலை 8:00 மணிக்கு துவங்கும் முதல் நாள் போட்டியை, துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் துவக்கி வைக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை