மேலும் செய்திகள்
மாவட்டத்தில் வரும் 13ல் மக்கள் நீதிமன்றம்
10-Sep-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம், இன்று நடக்கிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், ஆலந்துார் ஆகிய இடங்களில், நீதி மன்றங்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்களில் தேங்கியுள்ள மற்றும் பதிவு செய்யப்படாத வழக்குகளை சமரசமாக முடிக்க, தேசிய மக்கள் நீதிமன்றம் முடிவெடுத்தது. இதைத்தொடர்ந்து தேசிய மக்கள் நீதிமன்றம், செங்கல்பட்டு மாற்று முறை தீர்வு மைய வளாகத்தில், சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி சந்திரசேகரன் தலைமையில், இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இதில் வழக்காடிகள், வழக்கறிஞர்கள் ஆகியோர் பங்கேற்று, தாங்கள் வழக்குகளுக்கு தீர்வு காணலாம் என, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் முதன்மை உரிமையியல் நீதிபதி தனஞ்செழியன் தெரிவித்தார்.
10-Sep-2025