உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா துவக்கம்

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா துவக்கம்

மேல்மருவத்துார்:ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், நவராத்திரி விழா நேற்று துவங்கியது. மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், நவராத்திரி விழா நேற்று துவங்கியது. அதிகாலை 3:00 மணிக்கு ஆதிபராசக்தி அம்மன் மற்றும் குருபீடத்தில் உள்ள ஆன்மிக குரு பங்காரு அடிகளார் சிலைக்கு சிறப்பு அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து, ஆதிபராசக்தி அம்மனுக்கு, லட்சுமி பங்காரு அடிகளார், தீபாராதனை செய்து தீபம் ஏற்றி, நவராத்திரி விழாவை துவக்கி வைத்தார். அக்.,2 வரை, 12 நாட்கள், ஆதிபராசக்தி அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெறும். விழா ஏற்பாடுகளை, ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி