| ADDED : டிச 08, 2025 06:47 AM
பல்லாவரம்:பம்மலை அடுத்த பொழிச்சலுார், விநாயகா நகர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் முருகன், 48; அ.ம.மு.க., நிர்வாகி. இவர், பல்லாவரத்தில் இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று காலை, வழக்கம் போல், முருகன் தன் கடையில் விற்பனையில் ஈடுபட்டார். அப்போது, ஆட்டோவில் வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார் தலைமையிலான, ஐந்து பேர் கொண்ட கும்பல், முருகனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினர். பின், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முருகனை மீட்டு விசாரித்தனர். இதில், முத்துக்குமார், முருகன் ஆகிய இருவரும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், முன்விரோதம் காரணமாக முருகனை அரிவாளால் வெட்டியதும் தெரிந்தது. இச்சம்பவம் குறித்து, பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.