உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நியூஸ் ஜெ நிருபர் தாக்குதல் போலீசார் விசாரணை

நியூஸ் ஜெ நிருபர் தாக்குதல் போலீசார் விசாரணை

கூடுவாஞ்சேரி:செங்கல்பட்டு அடுத்த கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதியில், 'நியூஸ் ஜெ' டிவி., நிருபராக பாபு என்பவர் பணிபுரிகிறார். இதே பகுதியில் 'சன்' டி.வி., நிருபராக சூர்ய ராஜன் என்பவர் பணிபுரிகிறார்.நேற்று முன்தினம், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலையில், புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு செய்தி சேகரிக்க வந்த, 'நியூஸ் ஜெ' டிவி., நிருபர் பாபுவுக்கும், 'சன் டிவி' நிருபர் சூர்ய ராஜன் என்பவருக்கும் செய்தி சேகரிப்பதில் தள்ளு முள்ளு ஏற்பட்டு, வாய்த் தகராறு ஆனது. இதில் கோபமடைந்த 'சன் டிவி' நிருபர், தன் நண்பர்களை சம்பவ இடம் வரச் செய்து, 'நியூஸ் ஜெ' நிருபர் பாபுவை தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த பாபு, அளித்த புகாரின்படி, கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை