மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
8 hour(s) ago
மகன் பிறந்த நாளில் பள்ளிக்கு இருக்கைகள் வழங்கிய தம்பதி
8 hour(s) ago
பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை முதல்வர் திறந்து வைத்தார்
8 hour(s) ago
செங்கல்பட்டு:லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு, மார்ச்- 17ம் தேதி வெளியானது. அதே நாளில், தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், 20ம் தேதி முதல், மார்ச் 27ம் தேதி வரையில் மனு தாக்கல் செய்யலாம். மார்ச் 28ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.மார்ச் 30ம் தேதி மனுக்கள் வாபஸ் பெறலாம். ஏப்.,19ல் ஓட்டுப்பதிவும், ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.நேற்று, சுபமுகூர்த்த நாள் என்பதால், ஓரிரு வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என, எதிர்பார்க்கப்பட்டது. இதை பொய்யாக்கும் விதமாக, நேற்று ஒரு வேட்பாளர் கூட வேட்புமனு தாக்கல் செய்ய வரவில்லை.நேற்று, ஒரே நேரத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டதால், நாளை மற்றும் திங்கள் ஆகிய இரு தினங்களில், ஏதேனும் ஒரு தினத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என, கட்சி வட்டாரத்தினர் தெரிவித்தனர்.ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கும் வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. ஆனால், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வேட்பு மனுக்கள் பிரிவில் இருந்த தேர்தல் அலுவலர்களிடம், தி.மு.க., சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவிற்கான வேட்பு மனு வாங்கி சென்றனர்.அதன் பின், நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் என, 11 பேர் வேட்பு மனுக்கள் வாங்கி சென்றனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago