ஊட்டச்சத்து நல வாழ்வு பயிற்சி
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த முட்டுக்காடில், மத்திய அரசின் ஊனமுற்றோர் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் உள்ளது.இங்கு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கான,'ஊட்டச்சத்து மற்றும் நல வாழ்வு' குறித்து, ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி நேற்று நடந்தது.நிறுவனத்தின் இயக்குனர் நாசிகேதா ரவுத் பயிற்சியை துவக்கி வைத்து, ''மாற்றுத்திறனாளிகள் உடல் அளவிலும், மனதளவிலும் மேம்பட, சிறந்த ஊட்டச்சத்து உணவுகள் அளிப்பது மிகவும் முக்கியமானது,'' என பேசினார்.இந்த பயிற்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள் பங்கேற்றனர்.ஊட்டச்சத்து உணவுகளை சமைக்கும் முறைகளும் செய்து காண்பிக்கப்பட்டன.