உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலை விரிவாக்க பணிக்காக நைலான் சேப்டி ரோலர் அகற்றம்

சாலை விரிவாக்க பணிக்காக நைலான் சேப்டி ரோலர் அகற்றம்

செய்யூர்:மாமல்லபுரம் - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்தது.இதற்காக, 1,270 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்ட பணிகளுக்காக மூன்று ஆண்டுகளுக்கு முன், தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.அதன்படி தற்போது, சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பனையூர் பகுதியில் உள்ள அபாயகரமான சாலை வளைவில், தடுப்புகள் மீது வாகனங்கள் மோதி அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன. இதை தடுக்க, கடந்த 2018ம் ஆண்டு, 300 மீட்டர் நீளத்திற்கு வாகனங்கள் சாலை தடுப்பில் மோதாமல் இருக்க, இரவு நேரத்தில் ஒளிரும் தன்மையுடன்,'நைலான் சேப்டி ரோலர்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நவீன வளைவு அமைக்கப்பட்டது.இதனால், அதிக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.இந்நிலையில், சாலை விரிவாக்கத்திற்கு தடுப்புகள் இடையூறாக உள்ளதால், அந்த தடுப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், அகற்றப்படும் நைலான் சேப்டி ரோலர் தடுப்புகளை, சாலை விரிவாக்கத்திற்குப் பின் மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ