உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கழிவெளி பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

 கழிவெளி பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

திருப்போரூர்: திருப்போரூர் வட்டத்தில், திருப்போரூர், தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் பக்கிங்காம் கால்வாய், கழிவெளி, வனப்பகுதிகள், விவசாய பகுதிகள் உள்ளன. இதில் திருப்போரூர் கழிவெளிப்பகுதி அருகே , மருந்து, மாத்திரை கழிவுகள் கொட்டப்பட்டு எரிப்பதாக புகார் எழுந்தது. இந்த குப்பையால் நீர்நிலை, சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் ஆய்வு மேற்கொண்டு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து நேற்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திருப்போரூர் கழிவெளிப்பகுதி அருகே ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ