உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 20 நிமிடத்திற்கு ஒரு ரயில் தாம்பரத்தில் நெரிசல்

20 நிமிடத்திற்கு ஒரு ரயில் தாம்பரத்தில் நெரிசல்

தாம்பரம்,:தாம்பரம் யார்டில் நடைமேம்பால கட்டுமானப் பணி நடப்பதால், கடற்கரை- - தாம்பரம் தடத்தில், வழக்கமாக இயங்கும் 59 மின்சார ரயில்கள், காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, ரத்து செய்யப்பட்டன.அதனால், 20 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்பட்டது. இதனால், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகம் இருந்தது.இதனால், பலர் அரசு பேருந்துகளில் பயணித்ததால், பேருந்துகளிலும் நெரிசல் ஏற்பட்டது. ஞாயிறு விடுமுறை அன்று , பொங்கல் பண்டிகைக்கு ஷாப்பிங் சென்ற பொதுமக்கள், கூட்ட நெரிசலால் அவதிக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை