செய்யூரில் இன்று பழனிசாமி சுற்றுப்பயணம்
செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில், 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மேற்கொள்கிறார்.அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட செய்யூர், மதுராந்தகம், செங்கல்பட்டு ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளில், இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.செய்யூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட செய்யூர் பஜார் வீதியில், மக்களிடையே பேசவுள்ளார். மேள தாளத்துடன் செய்யூர் பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை அ.தி.மு.க., லத்துார் ஒன்றிய செயலர் ஓ.எம்.சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.