உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பல்லாவரம் அங்கன்வாடிகள் ஓவியங்களுடன் புதுப்பிப்பு

பல்லாவரம் அங்கன்வாடிகள் ஓவியங்களுடன் புதுப்பிப்பு

குரோம்பேட்டை:தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டலத்தில் உள்ள அங்கன்வாடி கட்டடங்கள் ஒவ்வொன்றும், போதிய வசதிகள் இன்றி செயல்படுவதாக புகார் வந்தது.இதையடுத்து, மண்டலத்தில் உள்ள 14 அங்கன்வாடிகளிலும், 75 லட்சம் ரூபாய் செலவில், வண்ண வண்ண ஓவியங்களுடன் அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.ஒவ்வொரு கட்டடத்திலும் வர்ணம் பூசப்பட்டு, சிறுவர்களை கவரும் வகையில், விலங்குகளின் ஓவியம் மற்றும் பெயர், உணவு வகை, மழை, குளிர் மற்றும் கோடை காலம் குறித்து தெரிந்துகொள்ளும் வகையிலான ஓவியம், பழம், பறவை, காய்கறி, பூ ஆகியவை குறித்த பெயருடன் கூடிய ஓவியங்கள் வரையப்படுகின்றன.அங்கன்வாடியில் படிக்கும் சிறுவர்கள் இந்த ஓவியங்களை பார்த்து கற்றுக்கொள்வதற்கும், மகிழ்ச்சியாக விளையாடுவதற்கும் வசதியாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை